நறுமுகை
கீழேயுள்ள இணைப்பில் இணைந்து பாருங்கள்..
http://narumugai.com/?p=19378
கேரளாவில் எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை இளையதளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. கேரள மாநில ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர் ஒத்தப்பாலம் அருகே உள்ள ஷோரனூரில். இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டும் அல்ல, தென் மாநிலங்கள் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை அடுத்து கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம். கில்லி, போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்கள் கேரளத்திலும் 100 நாட்கள் ஓடின. சமீபத்தில் விஜய் நடித்த 6 படங்கள் தமிழகத்தில் சரியாக ஓடாவிட்டாலும், கேரளாவில் ஓரளவுக்கு நன்றாகவே ஓடின.
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துவது கேரள ரசிகர்களின் வழக்கம். இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைக்கும் அளவுக்குப் போய்விட்டனர். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுகிறது
இது குறித்து பி.ஆர்.ஓ. (PRO) பிடி.செல்வகுமார் :
“ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை. விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்” என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பி.ஆர்.ஓ.வுமான பிடி செல்வகுமார்
நன்றி - நறுமுகை வலை தளம்.
என் குறிப்பு : இதுல மலையாளிங்க பினாத்துற பாத்தீங்கண்ணா, சினிமாவ சினிமாவாத்தான் ரசிக்கணும், நடிகர்களையல்லன்னூம்பாங்க. இத்த எங்க போய் சொல்லறது ....
அன்புடன்
Mohammed Rafi TMH