Pages

Tuesday, April 5, 2011

உணவு பழக்கம்உணவின் மகத்துவம் பெரும்பாலானவர்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் ஒவ்வொரு வேளை உணவும் உடலுக்கு எப்படி அவசியமாகிறது என்பது உங்களுக்குத் தெரியுமா?
 'உணவே மருந்து, மருந்தே உணவு' என்ற சித்தர்களின் கூற்றை கடைப்பிடித்தாலே நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம்.நினைவு சக்தி பெறுக்க உதவும் காய்கறிகள் - இங்கே Click செய்யவும்
நன்றி
அன்புடன்
Mohammed Rafi TMH

Share |

Monday, February 7, 2011

உணவே மருந்தாக - கீரை வகைகள்

கீரைகளின் குணங்கள்

முருங்கைக்கீரை :

இது ஒரு சத்து நிறைந்த கீரை, ஆண்மையை அதிகரிப்பது, குருதியை தூய்மைப்படுத்தும் இரும்புச் சத்துக் கொண்டது, உடல் வெப்பத்தை தணிப்பது, மலச்சிக்கலை போக்குவது. மாதவிடாய் தறுவாயில் வலியிருந்தால் முருங்கை கீரை சாற்றில் உப்பு போட்டு அருந்தினால் வலி மறையும். வயிற்றுப்புண் ஏற்படாமல் தடுக்கும். பிற மருந்துகளின் பக்க விளைவுகளை அகற்ற இதன் சாறு உதவும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இருதய நோய்களின் தாக்குத லிருந்து தப்பிக்கலாம். சிறுநீரைப் பெருக்குவதால் உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் பக்க விளைவுகள் ஏற்படுத்தும் மாத்திரைகளை நிதமும் எடுத்துக் கொள்வதிலிருந்து தப்பிக்கலாம். கருவுற்றோர் வாரம் ஒரு முறை சாப்பிட்டால் நீர் இறங்கும். கை பாத வீக்கத்தை தடுக்கும். சோகையை போக்கும்.


பசலைக்கீரை :

குளிர்ச்சி தருவதில் சிறந்தது,  நீர் உடலினர் அடிக்கடி சாப்பிடக் கூடாது. நீரைப் பெருக்கும். பால் சுரக்கும். வயிற்று புண்ணாற்றும், கண்ணொளி தரும்.
சிறுகீரை :

உடல் தளர்ச்சியை போக்கி ஊக்கமூட்டுவது, மலச்சிக்கலைப் போக்குவது, குடலின் பலத்தை அதிகரிப்பது, உடல் பித்தத்தை குறைப்பது.


வெந்தயக்கீரை :

முருங்கை போலவே இரும்புச் சத்துடையது. உடலுக்கு ஊக்கத்தை அளிப்பது, வயிற்றுப் புண்ணை ஆற்றுவதில் சிறந்தது, கண்ணிற்கு மிகவும் நல்லது, பேதி சமயத்தில் சப்பிட்டால் பேதியை கட்டுபடுத்தவல்லது.
அரைக்கீரை :

நீலிக்கு அடுத்து விஷங்களை முறிக்கும் ஆற்றல் அரைக்கீரைக்கு உண்டு. ஆங்கில மருந்துகளின் வேகத்தைப் பக்க விளைவுகளை முறியடிக்கும், தேமல், சொறி சிரங்கு உள்ளவர்கள் இந்தக்கீரையை தினசரி உணவுப்பழக்கத்தில் சேர்த்துக் கொண்டால் குணமாகிவிடும்.


அகத்திக் கீரை :

வெப்பத்தை தணிக்கும், உள் சூட்டை அகற்றுவதால் இதற்கு அகத்தி என்ற பெயர் ஏற்பட்டது, அனைத்து வகையான சத்துகளையும் உடையது இந்த கீரைதான், குடல், குருதியை தூய்மைப் படுத்தும். குடற்புழுவை கொல்லும், பித்தத்தை தணிக்கும். தலைச்சுற்று, மயக்கம் ஆகியவற்றைப் போக்கும், உடலில் எந்த வகையில் விஷம் சேர்ந்திருந்தாலும் அதை முறிக்கும் தன்மை இதற்குண்டு, ஆனால் இதை அடிக்கடி சாப்பிட்டால் பேதி ஏற்படும்.மணத்தக்காளி கீரை

குடல் புண்ணை ஆற்றுவதில் முதன்மையானது, குடலுக்கு பலமளிப்பது, பெண்மையை வளர்ப்பது, மங்கையருக்கு மார்பை வளரச்செய்வது, கருப்பை குறைப்பட்டையை நீக்குவது, குடற்புழுவை அகற்றுவது.

பாலக்கீரை :

உடலுக்கு வலுவூட்டுவது, மலச்சிக்கலைப் போக்கும்.
குளிர்ச்சியைத் தரும். குடல் நோய்களுக்கு நல்லது.


  
 புளிச்சக் கீரை :

உடலுக்கும் குடலுக்கும் வளமூட்டும். வயிற்றுப் புண்ணை ஆற்றும். வயிற்றுக் கடுப்பு உள்ளவர்கள் இக்கீரையை வெங்காயம், வெந்தயம் போட்டு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் உடனே நிவாரணம் தெரியும். குடல் பலவீனத்தால் ஏற்படும் பேதி நிற்கும், குருதிப் போக்கை குறைக்கும்.

சரி எல்லாத்தையும் படிச்சிட்டு அப்படியே விட்டு விடாமல் வேலை முடிந்து வீட்டுக்குப் போகும்போது ஏதாவது ஒரு கீரையை வாங்கிட்டுப் போய் உங்களுக்கு தெரிந்த முறையில் சமைத்து பயன் பெருக.

எப்படி சமைக்கன்னு யோசனை வேண்டுமெனில், இன்டர்னெட்டில் Search பண்ணினால் ஒரு நிமிஷத்தில் கற்றுக்கொள்ளலாமே!...

அன்புடன்
Mohammed Rafi TMH
Share |

Saturday, January 22, 2011

பட்டர் சிக்கன் மற்றும் தந்தூரிகளாக உருமாறும் செத்த கோழிகள்!!!

டெல்லியில் செத்த கோழிகளை வாங்கி
பிளாட்பார கடைகள் உணவு
தயாரிக்கின்றனர் என தகவல் வெளிவந்துள்ளது.
இது அனைவரையும் பெரும் அதிர்ச்சியில்
ஆழ்த்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


அசைவ பிரியர்கள் சூடு பறக்க சிக்கன் சூப், சில்லி சிக்கன் என விதவிதமாக பிளாட்பார கடைகளில் வாங்கி உண்பார்கள். டெல்லியிலும் தெருவோர கடைகளில் அசைவ உணவுகளின் விற்பனை மிகவும் அமோகமாக இருக்கும்.


டெல்லியில் உள்ள பகர்கஞ்ச் மார்க்கெட் பகுதியில், 3 கிலோ எடையுள்ள உயிர்கோழி ரூ.420 மற்றும் அதற்கு மேல் விற்கப்படுகிறது. இதற்காக, இரவு முழுவதும் ஏராளமான லாரிகளிலிருந்து, பிராய்லர் கோழிகள் இறக்கப்படும்.

போக்குவரத்தின் போது, ஒவ்வொரு லாரிகளிலும் இருந்து சராசரியாக 15 முதல் 20 கோழிகள் வரை உயிர் இழக்கின்றது. இந்த கோழிகள் குப்பையில் எறியப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கோழிகளை கிலோ ரூ.15 வீதம், 3கிலோ எடையுள்ள கோழிகளை ரூ.50க்கு வாங்குவதற்கு மார்க்கெட்டில் ஒரு கூட்டமே காத்திருக்கிறது. இவர்கள் எல்லாரும் பகர்கஞ்ச், கரோல் பாக் பகுதிகளில் ஓட்டல், தெருவோர கடைகள் நடத்துபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

லாரி டிரைவர்கள், கிளீனர்களிடம் செத்த கோழிகளை இவர்கள் பேரம் பேசி வாங்குவதை தினமும் அதிகாலையில் பார்க்கலாம்.

இது குறித்து ஓட்டல் வியாபாரி ஒருவர் கூறுகையில், “உணவு பொருட்கள் விலை அதிகரித்து கொண்டே போகிறது. அதற்கு ஏற்றாற்போல் நாங்கள் விலையை ஏற்றினால், வியாபாரம் படுத்துவிடும்".


ஒரு பிளேட் சிக்கன் 30 ரூபாய். கோழிக்கறியை கிலோ ரூ.140க்கு வாங்கி எப்படி வியாபாரம் முடியும். மலிவு விலைக்கு கோழிகளை வாங்கினால் மட்டுமே நல்ல முறையில் வியாபாரம் நடக்கும் என்று கூறினார்.

எனவே வெளியிடங்களில் எவ்வளவு பெயர் பெற்ற ஹோட்டல்களினாலும், அவர்கள் எத்தகைய பொருட்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதை மேலே காண்கின்ற செய்திகளின் வாயிலாக நாம் அறிய முடிகிறது.

இது போன்ற பல செய்திகள் நாம் கேட்டும், படித்துமிருந்தும் வெளியிடங்களில் அவசியம் அசைவம் உட்கொள்ளது தவிர்த்தல் நமது ஆரோக்கியத்துக்கு நல்லது.

எனவே வீட்டில் சமைத்த அசைவ உணவையே உண்டு ஆரோக்கியம் பெருக.


 அன்புடன்
 Mohammed Rafi TMH

Share |

Saturday, January 15, 2011

கவிக்கோவின் - தாஹிப் நகரில் தாஹா நபிகள்

 1978, நவம்பர் 14-ஆம் நாள் காயல்பட்டினத்தில் நிகழ்ந்த அனைத்துலக இஸ்லாமியத் தமிழிலக்கிய மாநாட்டில் கவிக்கோ தலைமையில் நடந்த இஸ்லாமியக் கவியரங்கில் அவர் பாடிய தலைமைக் கவிதையின் ஒரு பகுதி :

தாயிப் நகரில் தாஹா நபிகள்...

நபிகள் பெருமான் -
இல்லாமல் வாடிய
ஏழை உலகம்,

கேட்காமலேயே
கிடைத்த அருட்கொடை !தட்டாமலேயே
திறந்த கதவு !
தேடாமலேயே
தெரிந்த மூலிகை !

இளமையில் பெற்றோரை
இழந்த இவ்வனாதைதான்
உலகுக்கே தாயாகி
ஊட்டி வளர்த்தவர் !

படிக்கத் தெரியாத இந்தப்
பாமர நபியிடம்தான்
பள்ளிக் கூடங்களும்
பாடம் பயின்றன
இல்லை ..
பல்கலைக் கழகங்களே
பாடம் பயின்றன !

கந்தல் அணிந்த இந்தக்
கருணைநபி கையால்தான்
அம்மண உலகம்
ஆடையைப் பெற்றது !

பாலையில் முளைத்த இந்த
பசுமர நிழலில்தான்
வெயிலும்கூட
இளைப்பாற வந்தது !

இந்த ஏழையை
ஈன்ற பின்னரே
கிடக்காத புதையல்
கிடைத்தது போன்று
இந்த உலகம்
இறுமாப் படைந்தது !

மண்ணில் இந்த
மணிவிளக்கைக்
கண்டபின்தான்
விண்ணும்தன் சுடர்களுக்காய்
வெட்கம் கொண்டது !வல்லூறுகளும் இவர்
வலைக்குள் குடிபுகுந்து
வெள்ளைப் புறாக்களாய்
விண்ணெங்கும் பறந்தன !


உயர்மறை மகுடி இவர்
ஊதியத்கைக் கேட்டவுடன்
நாகத்தின் பற்களிலும்
நல்லமுதம் ஊறியது !


தனித்தனி சாதி
அறைகளில் கிடந்த
மனித எழுத்துக்களை
ஒரே வாக்கியமாக
அச்சுக் கோர்த்து
சகோதரத்துவ
சமுதாயம் கண்டவர் !
பாட்டால் புகழைப்
பலர் பெறுவர் ஆனால்
பரமனின் நபியைப்
பாடுவதால் நமது
பாட்டுக்கல்லவா
பெரும்புகழ் கிடைக்கும்
அன்று அந்தத்
தாயிப் நகரில்
தாஹா நபிகள் !
தாயிப் வாசிகளே !
விந்தை மனிதர் நீர்!
கல்லின் மீதுதான்
பூவைத் தூவுவீர்
ஆனால் அன்று
(
பூமான் நபியெனும்)
பூவின் மீதல்லவா
கல்லைச் சொரிந்தீர் !
வெல்வதாக நினைத்தீர் !
ஆனால் தோற்றவர் நீங்களே !
நீங்கள் வணங்கும்
கற்களை அல்லவா
கருணைநபி காலடியில்
மண்டியிட வைத்தீர் !
உங்கள் கற்கள்
ஏற்படுத்தியவை காயங்கள் அல்ல !
பொறுமைக்குக் கிடைத்த
இரத்தினப் பதக்கங்கள் !
இறை சோதனையின்
குங்கும முத்தங்கள் !

பொய்மையை எதிர்த்த
வாய்மைத் தூதருக்கு
ரணங்கள் தானே
ஆபரணங்கள் !

 அதோ பாருங்கள் !
நீங்கள் எறிந்த கற்கள்
பச்சை ரத்தம்
படிந்து கிடப்பதை !
காயங்கள் செய்த
பிரச்சாரத்திற்குரிய
பெரிய வெற்றி !
அவை கூட
மதம் மாறி விட்டன !
தாயிப் வாசிகளே !
கனிமரம் என்பதால்
கல்லெறிந்தீரோ?

கல்லடி பட்டால்
கனி மட்டுமா உதிரும்?
காய்கூட உதிருமே !
ஆனால்
கல்லடிக்குக்
கனிமட்டும் உதிர்ந்த
கருணை மரத்தை
வேறு எங்கேனும்
கண்டவருண்டோ?
எங்கள் பெருமான்
காயம்பட்டதோ
அன்றொருநாள் !
ஆனால் இரத்தமோ
இன்றுமல்லவா வழிகிறது
எங்களின்
எழுதுகோல் வழியே


 
நன்றி  :  http://www.mailofislam.com/

அன்புடன்
Mohammed Rafi TMH

Share |