Pages

Wednesday, December 1, 2010

நற்சிந்தனைகள் சில .... சேகரித்தது

அன்புத் தம்பி, கல்லிடை மைதீன், S/O. யூசுபு தரகன், பெரிய பள்ளிவாசல் தெரு, அவர்களால் இணையத்தில் சேகரித்தது (Collections from Web), அப்படியே உங்களுக்கு தருகிறேன்.
Thanx to Kallidai Mydeen

நல்ல முடிவுகள், அனுபவத்திலிருந்து பிறக்கின்றன;
ஆனால் அனுபவமோ
தவறான முடிவுகளிலிருந்து கிடைக்கிறது.
- பில் கேட்ஸ் (Bill Gates)

சிக்கல்கள் என்பவை,
ஓடும் ரெயிலிலிருந்து பார்க்கும்
மரங்களைப் போன்றவை.
அருகில் போனால் அவை பெரிதாகத் தெரியும்.
அவற்றைக் கடந்து சென்றால்
அவை சிறிதாகிவிடும்.
இதுதான் வாழ்க்கை!

நீ தனிமையில் இருக்கும்போது
உனக்கு என்ன என்ன தோன்றுகிறதோ
அதுதான் உன் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்.
- விவேகானந்தர்.....

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
ஒரு நொடி துணிந்தால் இறந்துவிடலாம்.
ஒவ்வொரு நொடியும் துணிந்தால்
நாம் ஜெயித்து விடலாம்....

மிகவும் நேர்மையாக இருக்காதீர்கள்;
ஏனெனில் நேரான மரங்கள்
முதலில் வெட்டப்படும்;
நேர்மையானவர்களே முதலில்
பழிதூற்றப்படுவார்கள்.
கொஞ்சம் வளைந்து கொடுங்கள்.
வாழ்க்கை, லகுவாய் இருக்கும்.
- சாணக்கியனின் பொன்மொழி

 மெழுகுவர்த்திக்கு உயிர் கொடுக்க
உயிர்விட்டது தீக்குச்சி.
நினைத்து நினைத்து உருகியது
மெழுகுவர்த்தி.

விட்டுக் கொடுங்கள்; விருப்பங்கள் நிறைவேறும்.
தட்டிக் கொடுங்கள்; தவறுகள் குறையும்.
மனம் விட்டுப் பேசுங்கள்; அன்பு பெருகும்.

உதவும் கரங்கள்
ஜெபிக்கும் உதடுகளைவிடச் சிறந்தது.
- அன்னை தெரஸா.

வெற்றி என்பது நிரந்தரமல்ல;
தோல்வி என்பது இறுதியானதுமல்ல!
அதனால்,
வெற்றிக்குப் பிறகு
தொடர்ந்து உழைப்பதை நிறுத்த வேண்டாம்;
தோல்விக்குப் பிறகு
தொடர்ந்து முயல்வதை நிறுத்த வேண்டாம்!

கண்களைத் திறந்து பார்
அனைவரும் தெரிவார்கள்.
கண்களை மூடிப் பார்.
உனக்குப் பிடித்தவர்கள் மட்டும் தெரிவார்கள்!

தோல்வியின் அடையாளம் தயக்கம்!
வெற்றியின் அடையாளம் துணிச்சல்!
துணிந்தவர் தோற்றதில்லை
தயங்கியவர் வென்றதில்லை!
 
கையில் 10 ரோஜாக்களோடு
கண்ணாடி முன் நில்லுங்கள்!
இப்போது நீங்கள் 11 ரோஜாக்களைக் காண்பீர்கள்!
அந்த 11ஆவது ரோஜா,
உங்கள் புன்னகை!
நீங்ள் இப்போது புன்னைப்பதை நான் அறிவேன்!
வெற்றியை விரும்பும் நமக்குத்
தோல்வியைத் தாங்கும் மனம் இல்லை;
தோல்வியைத் தாங்கும் மனம் இருந்தால்
அதுவும் ஒரு வெற்றிதான்.....

இதை மெதுவாகப் படியுங்கள்:
LIFEISNOWHERE
இதை எப்படிப் படித்தீர்கள்?
LIFE IS NO WHERE என்றா?
LIFE IS NOW HERE என்றா?

நாம் பார்க்கிற விதத்தில்தான் வாழ்க்கை இருக்கிறது
என்பதை இந்த ஒற்றை வரி உணர்த்திவிடுகிறது...!
நீங்கள் ஒரு வாய்ப்பைத் தவறவிட்டால்
உங்கள் விழிகளைக் கண்ணீரால் நிரப்பாதீர்கள்!
உங்கள் கண்ணீர்,
உங்கள் முன் உள்ள இன்னொரு வாய்ப்பை மறைத்துவிடும்!
அழகிய புன்னகையுடன் எதிர்கொள்ளுங்கள்.....!

நீ மற்றவருக்கு வழிகாட்டி ஆவதற்காகப்
பிறந்திருக்கிறாய்.
ஏன் மற்றவர்களிடம் உன் வழிகாட்டியைத்
தேடிக் கொண்டிருக்கிறாய்?
இந்த உலகம்
உன் வெற்றிக் கதையைப் படிக்கக்
காத்துக்கொண்டிருக்கிறது.....

பிறக்கும்போது தாயை அழவைக்கிறோம்
இறக்கும்போது எல்லோரையுமே அழவைக்கிறோம்
வாழும்போதாவது
எல்லோரிடமும் சிரிக்கப் பழகுவோம்......

வியர்வைத் துளிகளும் கண்ணீர்த் துளிகளும்
உப்பாக இருக்கலாம்.
ஆனால்,
அவைதான்
வாழ்வை இனிமையாக மாற்றும்........

நாம் அனைவரும்
ஒரே அளவு திறமை பெற்றவர்கள் இல்லை
ஆனால்,
நம் திறமையை வளர்த்துக்கொள்ள
ஒரே அளவு வாய்ப்புகளைப் பெற்றிருக்கிறோம்.
- அப்துல்கலாம்.

ஓர் உண்மை:
நீ மகிழ்ச்சியாக இருக்கும்போது,
நீ யாரை விரும்புகிறாயோ
அவரை நினைத்துக்கொள்வாய்!
நீ துயரத்தில் இருக்கும்போது,
உன்னை யார் விரும்புகிறாரோ
அவரை நினைத்துக்கொள்வாய்!

யாரேனும் உங்களைக் காயப்படுத்தினால்
அதற்காக வருந்தாதீர்கள்.
ஏனெனில் அதுதான் இயற்கையின் விதி.
சுவையுள்ள கனிகளைத் தரும் மரம்தான்
அதிக கல்லடிகளைப் பெறும்.

கண்ணீர் சிந்தும்போதுகூடக் கவலை இல்லை எனக்கு.
காரணம், என்றுமே என் கண்ணீரைத் துடைக்க
உன் கரங்கள் இருக்கும் என்ற நம்பிக்கையில்.

ஒரு சிறிய கையசைப்பு, நம்மை அழவைக்கலாம்!
ஒரு சிறிய நகைச்சுவை, நம்மைச் சிரிக்கவைக்கலாம்!
ஒரு சிறிய அக்கறை, நம்மைக் காதலில் விழவைக்கலாம்!
ஒரு சிறிய தொடுதல், நம் உணர்வைக் கூர்மைப்படுத்தலாம்!
நானும் நம்புகிறேன்
என் சிறிய குறுஞ்செய்தி, (SMS)
உனக்கு என்னை நினைவுபடுத்தலாம்................!
  
LOVE EVER, .... HURT NEVER..........
Thanks & Regards
__._,_.___Kallidai Mydeen ....
Big Mosque Street, Yusuf Tharagan
 ABUDHABI (U.A.E)
+971503142782

பின் வருபவை அடியேன் சேகரித்தது
Mohammed Rafi TMH

 
அவன் தூயவன் ! 

அந்தரத்திலே!   உலகம் ,
ஆளில்லா வானவெளி!
எங்கிருந்து வந்தோம்?
எங்கு செல்வோம்
நம்  கண்களுக்கு தெரியவில்லை?

இங்கு காற்றில்   மிதக்க வைத்தான்!
தந்தையின் முதுகந்தண்டில் புக வைத்தான்!
கருவறை நோக்கிய பயணத்தில்!
கோடி போட்டியாளரில் 
நம்மை  முடிசூட வைத்தான்!

அட்டை பூச்சி போல நாம்  !
ஒட்டியிருந்த காலத்தில் நாம்  வசிக்க
கருவறை படைத்தான்!

நம்மை  இரத்த  கட்டியாக்கினான்
பின் சதைக்கட்டியாகினான்!
பின்  எலும்பு கொண்டு போற்றினான்  !

நம்  தாயின் இரத்த வகை
நம்மிலிருந்து  வேறுபட்ட போது!
செவிலி திரை கொண்டு நம்மை  பாதுகாத்தான்!
மண்ணில் நாம் பிறந்ததும் சுவாசிக்க
உள்ளுணர்வை கொடுத்தான் !

நம் தாயின் பாலை நமக்கு இனிப்புடன்
உற்பத்தி செய்தான்!
அதை குளிர் காலத்தில் வெது வெதுப்பாகினான்!
கோடையில் குளிர் சாதனா பெட்டியில்லாமல்
குளிரவைத்து புகட்டினான்!

இவையெல்லாம் நீ உலகை  அறியாமலிருந்த
போது உன்னை பாதுகாத்தான்!
உனக்கு  வாலிபம் வந்தவுடன்
நான் இல்லாமல் எதுவும் இல்லை
என்கிறாயே! நிச்சயமாக மனிதன் நன்றிகெட்ட
அநியாயகாரனாகவே  இருக்கிறான் !

மனிதனே!  அந்த ஒருவனை ! மறந்துவிடாதே!
.அவன் ஒருவன்! அவன்  தனித்தவன்!
சேட்டலைட்டுகள்   செய்யப்படாத காலத்தில்
பிரதிபலிக்கும் அயனி மண்டலம் படைத்து  வைத்தவன் !

விண்ணிலிருந்து இரும்பை இறக்கி வைத்தவன்!
விண்னை துணில்லாமல் உயர்த்தியவன்!
உலகை அடக்கி ஆள்பவன்!
அவன் மகா தூயவன் !!!.

எல்லா உலகும் ஏகமாய் ஆளும் இணையற்ற் அல்லாஹ்வே
வல்லமை வாய்ந்த உன்னிடம் நாங்கள்
மன்னிப்பைத் தேடுகின்றோம் .....

அஸ்தஹ்ஃபிருல்லாஹ் ...
அஸ்தஹ்ஃபிருல்லாஹ் ...
அஸ்தஹ்ஃபிருல்லாஹ் ...


 மக்களிடம் நற்குணத்துடன் நடந்து கொண்டால்  ...

  •  தன்னைப் போன்ற பிற மனிதர்களிடம் நற்குணத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்ற நற்சிந்தனை உருவானால், அவரிடம் பொதுநலச் சிந்தனை மேலோங்கிவிடும்.

  •   பொதுநலம் பேணும் உயர் சிந்தனை உருவாகி விட்டால் சுயநலம் செயலிழந்து விடும், யநலமே பெரும்பாலான தவறுகள் இழைப்பதற்கு காரணமாகிறது, 

  • பொதுமக்களிடம் நற்குணத்துடன் நடந்து நன்மதிப்பைப் பெற்றவர் தவறு செய்யத் துணிய மாட்டார். 

  •  தனிமையில் அல்லாஹ்வுக்கு அஞ்சுவார், வெளியில் மக்களின் விமர்சனத்திற்கு வெட்குவார்.

Mohammed Rafi TMH

அன்புடன்
Share |

No comments:

Post a Comment