Pages

Tuesday, November 30, 2010

இளையதளபதி விஜய்க்கு சிலை வைத்த கேரளா ரசிகர்கள், Vijay Statue in Kerala | நறுமுகை

இளையதளபதி விஜய்க்கு சிலை வைத்த கேரளா ரசிகர்கள், Vijay Statue in Kerala
நறுமுகை

கீழேயுள்ள இணைப்பில் இணைந்து பாருங்கள்..

http://narumugai.com/?p=19378




கேரளாவில் எந்த தமிழ் நடிகருக்கும் கிடைக்காத பெருமை இளையதளபதி விஜய்க்கு கிடைத்துள்ளது. கேரள மாநில ரசிகர்கள் விஜய்க்கு சிலை வைத்துள்ளனர் ஒத்தப்பாலம் அருகே உள்ள ஷோரனூரில். இளைய தளபதி விஜய்க்கு தமிழகம் மட்டும் அல்ல, தென் மாநிலங்கள் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழகத்தை அடுத்து கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம். கில்லி, போக்கிரி, வேட்டைக்காரன் போன்ற படங்கள் கேரளத்திலும் 100 நாட்கள் ஓடின. சமீபத்தில் விஜய் நடித்த 6 படங்கள் தமிழகத்தில் சரியாக ஓடாவிட்டாலும், கேரளாவில் ஓரளவுக்கு நன்றாகவே ஓடின.
விஜய் படங்கள் ரிலீஸ் ஆகும்போது, கட் அவுட், தோரணம், பேனர், பாலாபிஷேகம் என அமர்க்களப்படுத்துவது கேரள ரசிகர்களின் வழக்கம். இப்போது தமிழ் ரசிகர்களுக்கு ஒருபடி மேலே போய் விஜய்க்கு ஒரு பெரிய சிலையே வைக்கும் அளவுக்குப் போய்விட்டனர். இந்த சிலை கை கால்கலை அசைக்கும் அளவுக்கு அமைக்கப்பட்டுள்ளது. விஜய்யின் பாட்டுக்கு இந்த விஜய் சிலை கை கால்களை ஆட்டி நடனமெல்லாம் ஆடுகிறது

இது குறித்து பி.ஆர்.ஓ. (PRO) பிடி.செல்வகுமார் :

“ஷோரனூரில் இப்போது அந்த சிலை வைக்கப்பட்டுள்ளது. கேரளத்தில் ஒரு தமிழ் நடிகருக்கு சிலை வைக்கப்படுவது இதுவே முதல்முறை. விஜய் சிலையைக் காண நிறைய பேர் தினமும் வருவதால், ஷோரனூர் புதிய சுற்றுலா மையம் போல ஆகிவிட்டதாக கேரள மக்களே கூறுகின்றனர்” என்கிறார் விஜய்யின் மேனேஜரும் பி.ஆர்.ஓ.வுமான பிடி செல்வகுமார்


நன்றி  -  நறுமுகை வலை தளம்.

என் குறிப்பு :  இதுல மலையாளிங்க பினாத்துற பாத்தீங்கண்ணா, சினிமாவ சினிமாவாத்தான் ரசிக்கணும், நடிகர்களையல்லன்னூம்பாங்க.  இத்த எங்க போய் சொல்லறது ....

அன்புடன்

Mohammed Rafi TMH
Share |

Monday, November 29, 2010

காரணப்பெயர்கள் ...

ச்சும்மாவே ஆஃபீஸ்ல இருந்தேனா, அப்படியே ....   ஒரு கடி .... ?!



நானில்லேப்பா ...

இது ஒரு நகைச்சுவை பதிவு.  ஒரு மெத்த படித்தவனின் "செம்மொழி"யாக்கம். பெயரும், அதன் தொழில் சார்ந்த அர்த்தமும். உங்கள் பெயரும் இதில் இருந்தால் சரிதானாஎன்று பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது தொழில் சார்ந்து உங்கள் பெயரை மாற்றிக்கொள்ளுங்கள்...விரும்பினால்.  

குறிப்பு: வலைத்தளங்களில் வலம் வந்தபொது படித்து இல்ல.. இல்ல  சுட்டது!
.
.
.














. Agriculturist = பச்சயப்பன்
Alcoholic =
கள்ளபிரான்
Attentive Driver =
பார்த்தசாரதி
Baker =
சீனிவாசன்
Barber =
கொண்டையப்பன்
Bartender =
மதுசூதனன்
Batsman =
தாண்டியப்பன்
Beggar =
பிச்சை
Bowler =
பாலாஜி
Builder =
செங்கல்வராயன்
Cardiologist =
இருதயராஜ்
Dairy Farmer =
பசுபதி - பால்ராஜ், பாலையா
Dentist =
பல்லவன் / பல்லவி
Diabetologist =
சக்கரபாணி
Doctor =
வைத்தியநாதன் - வைத்தியலிங்கம்
Dog Groomer =
நாயகன்
Driver =
சாரதி
ENT Specialist =
நீலகண்டன் - என் குறிப்பு - கண்ணப்பன்
Exhibitionist =
அம்பலவாணன்
Exorcist =
மாத்ருபூதம்
Female Spin Bowler =
திருப்புரசுந்தரி
Fiction writer =
நாவலன்
Financier =
தனசேகரன் - என் குறிப்பபு  - செல்வம்
Horticulturist =
புஷ்பவனம் - என் குறிப்பு - புஷ்பா
Hypnotist =
சொக்கலிங்கம்
Javelin Thrower =
வேலாயுதம்
Karate Expert =
கைலாசம்எத்திராஜ்
Landscaper =
பூமிநாதன்
Lawyer =
கேஸவன்
Magician =
மாயாண்டி
Makeup Man =
சிங்காரம்
Marriage Counselor =
கல்யாண சுந்தரம் - கல்யாணி
Mentalist =
புத்திசிகாமணி - மதி மாலிக், மதிவாணன்
Meteorologist =
கார்மேகம்
Milk Man =
பால்ராஜ்
Mountain Climber =
மலைச்சாமி
North Indian Lawyer =
பஞ்சாபகேஸவன்
Nutritionist =
ஆரோக்கியசாமி
Ophthalmologist =
கண்ணையன், - கண்ணம்மா
Painter = சித்திரகுப்தன்
Pediatrist =
குழந்தைசாமி
Polevaulter =
தாண்டவராயன்
Psychiatrist =
மனோ
Sex Therapist =
காமதேவன்
Singer =
ராகவன்
Snake Charmer =
நாகராஜன்/நாகம்மா
Spin Bowler =
திருப்பதி
Stockist =
பண்டாரம்
Sumo Wrestler =
குண்டுராவ்
Weight Lifter =
பலராமன்

படிச்சிட்டு அப்படியே ஏதாவது முணங்கிட்டுப் போலாம்ல   .....  அட... அடடா.. அதான்வே.. comments..

அன்புடன்
Mohammed Rafi TMH
Share |

Wednesday, November 24, 2010

இரண்டு சக்கர வண்டி ?? !!!


இந்த இரண்டு சக்கர வண்டியின் (மோட்டார் பைக்) மோகம் இப்போது மிகவும் மிகுந்து விட்டது. மேலும் இப்போது இவைகளை வாங்குவதும் மிக எளிமையாகி விட்டது. அதாவது மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரித்து விட்டது எனலாம்.

முன்பெல்லாம் பார்த்தால் ஊரில் ஒரு சில வீ டுகளில் தான் பைக்குகளை பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது நமது எல்லா தெருக்களிலும் பார்ததால், 10-15 வருடங்களுக்கு முன்பு சைக்கிள்களை கண்டதுபோல் வீட்டுக்கு வீடு இன்று பைக்குகள் அதிகரித்து விட்டது. இன்று பெருமைக்காகவோ அல்லது அந்தஸ்துக்காகவாவது வேண்டி வாங்க நேரிடுகிறது ...

வேலைகளெல்லாம் எளிதாக முடிகிறது, சுகமான, Intresting ஆன ரைடு, வாங்கும் சக்தி, Gulf Return, மற்றும் சில பல காரணங்கள் சொல்லப்பட்டு இவைகளை சந்தோஷத்தோடு வாங்குகிறோம். நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதே சமயம் இதில் ஆபத்து நிறைய இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்து இருந்தும், அரசாங்கங்கள், சாலைத் துறையினரின் கட்டுப்பாடுகள், விதி முறைகளிருந்தும் இவைகளைப் பயன்படுத்தும் போது மட்டும், நாம் அவைகளை பின்பற்றுவதில்லை.

 அவசரம், அதிகவேகம், கவனமின்மை மேலும் அதிக தூரம் பயணம், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது இவைகளினால் எத்தனையோ விபத்துகள் கண்டும், கேட்டும், அறிந்திருந்தும் நாம் அவைகளை கடைபிடிப்பதிலும் கவனமே கொள்வதில்லை.

நாம் பைக்கில் பயணம் செய்யும் போது வேகமாக சென்றால் சீக்கிரம் போகும் இடம் சென்று விடலாம் என் நினைக்கிறோம். எத்தனை சீக்கிரம் செல்ல முடியும்?  ஒரு 10-15 நிமிடம்? இவ்வளவு தானே முடியும். இதையே 15 நிமிடம் முன்னால் புறப்பட்டாலும் சாதிக்க முடியுமே! ஆனால் வேகமாக சென்றால், ஏதேனும் சிறிய தடங்கல், விபத்து ஏற்பட்டால் இந்த 10-15 நேரமிச்சம் 1/2 மணியாகலாம், ஓரிரண்டு மணிகள் கூட தாமதமாகலாமல்லவா?

ஏன் கை கால் முறிவு, சிறிய பெரிய காயங்கள் ஏற்பட்டால் ஓரிரண்டு நாட்கள் மற்றும் பணச்செலவு நாம் இழக்க நேரிடலாம். இன்னும் பெரிய காயங்கள், இரத்த இழப்பு அதிகமானால் எத்தனை வேதனை, பெரிய பண நஷ்டம், மன உளைச்சல், நமக்கு மட்டுமில்லாமல் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எத்தனை சிரமம், மன வேதனை, இன்னும் பல ....

ஆதலினால் அன்பர்களே நாம் எப்போதும் கார் மற்றும் பைக்கை செலுத்தும் போது நம் கவனம் வேறு பக்கம் போகாமல், டிரைவிங்கில் கவனம் முழுதும் செலுத்தி, வேகம் மிகவும் குறைத்து, சாலை விதிகள் மதித்து, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக செல்வோமாக!
விபத்துகளை தவிர்த்து வாழுவோமாக!  ....

அன்புடன்
Mohammed Rafi TMH

 Picture  :  From Google -
Thanks

Share |

Saturday, November 20, 2010

தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்

                                            ஆண்டவனின் திருப்பெயரால் ....


















இந்த வலைக்கு வருகை தந்து ஆதரவு தரும் எல்லா நல்ல அன்புள்ளங்களுக்கும்,  தங்களின் குடும்பத்தாருக்கும் என் இதயங்கனிந்த தியாகப் பெருநாள் வாழ்த்துக்கள்.

நம் எல்லோருக்கும் இந்தப் பெருநாளில் மகிழ்ச்சியையும், நல்லாரோக்கியத்தையும், நற்பாக்கியங்களையும் நல்லருட்கொடைகளையும், தந்தருள்வானாக ...

என்ற துஆக்களுடன், இறைவனிடம் வேண்டியவனாய் ...


அன்புடன்

Mohammed Rafi TMH & Family
Share |

Sunday, November 7, 2010

இஸ்லாம் பிறர் பார்வையில்


அன்புள்ளங்களுக்கு,

வலைப்பூக்களில் உலவி வருகையில் மனதை உறுத்திய பதிவுத் தொகுப்புகள்
















இஸ்லாம் பற்றி, அறிஞர் அண்ணா, சுஜாதா, மஹாத்மா காந்தி, பாரதியார், கண்ணதாசன், கலைஞர் கருணாநிதி, சுவாமி விவேகானந்தர், ... மற்றும்

வெளிநாட்டு அறிஞர்கள் விளக்கங்கள்.

 








நம்மில் எத்துணை பேர் இஸ்லாத்தை இப்படி புரிந்திருப்போம்? ...

இருந்தாலும் இன்றாவது பிறர் புரிந்ததிலிருந்து விளக்கியதிலிருந்து புரிந்து, நாமும் நம் கவனத்தை ஈமானின் பக்கம் இன்னும் கூடுதலாக்கி, இஸ்லாம் வழி நின்று, நெறி பேணி, கடமைகள் செய்து, இறைவனின் அருள் பெருவோமாக!



அன்புடன்,

Mohammed Rafi TMH
Share |

Saturday, November 6, 2010

என் மனதை சலனப்படுத்தியதிலிருந்து சில ...

கவிதை, இசை,  ஈர்ப்பு ....

கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து...
இளையராஜா, சுஜாதா, இன்குலாப் ...



நிழல்கள்,பாலைவனச்சோலை, அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை,  காதல் ஓவியம் ....  போன்ற படங்கள் ரிலீஸான காலம் முதலே "வைரமுத்து"வின் கவிதைகள் என்றாலே ஒரு மோகமுண்டு. தமிழின்பால் எனக்கு ஒரு ஈர்ப்பு வந்ததே வைரமுத்துவின் எழுத்துக்களால் தான்னு சொல்லலாம்.

அப்போது (1983)  நெல்லைக்கு ITI க்கு படிக்க வழக்கமாக (கல்லிடை to நெல்லை) ரயிலில் போவதுண்டு,  அப்போதெல்லாம் ITI க்கு கொண்டு போகும் நோட்டுகளுடன் மேலே எல்லோரும் காணும் படியாக பெருமையுடன் வைரமுத்து கவிதை, சுஜாதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், வலம்புரி ஜான், இன்குலாப் இவர்களின் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டும், ரயிலில் போகும்பொது படித்துக் கொண்டும், படித்தவைகளை அவற்றின் தாக்கங்களை மற்றவர்களுடன் ரசனையாக பகிர்ந்து கொண்டும் மகிழ்ந்த காலம். அவைகளை படித்துக் கொண்டிருக்கும் போது என்னையே மறந்து விட்டிருப்பேன்.

அவைகளில் சில PDF வடிவில் இங்கே இணைத்திருக்கிறேன் உங்களுக்காக.  Click & Save to Your desktop. நேரம் கிடைக்கும் தவறாது படித்து மகிழுங்கள். ...
Share |