Pages

Wednesday, November 24, 2010

இரண்டு சக்கர வண்டி ?? !!!


இந்த இரண்டு சக்கர வண்டியின் (மோட்டார் பைக்) மோகம் இப்போது மிகவும் மிகுந்து விட்டது. மேலும் இப்போது இவைகளை வாங்குவதும் மிக எளிமையாகி விட்டது. அதாவது மக்களுக்கு வாங்கும் திறன் அதிகரித்து விட்டது எனலாம்.

முன்பெல்லாம் பார்த்தால் ஊரில் ஒரு சில வீ டுகளில் தான் பைக்குகளை பார்க்க முடிந்தது. ஆனால் இப்போது நமது எல்லா தெருக்களிலும் பார்ததால், 10-15 வருடங்களுக்கு முன்பு சைக்கிள்களை கண்டதுபோல் வீட்டுக்கு வீடு இன்று பைக்குகள் அதிகரித்து விட்டது. இன்று பெருமைக்காகவோ அல்லது அந்தஸ்துக்காகவாவது வேண்டி வாங்க நேரிடுகிறது ...

வேலைகளெல்லாம் எளிதாக முடிகிறது, சுகமான, Intresting ஆன ரைடு, வாங்கும் சக்தி, Gulf Return, மற்றும் சில பல காரணங்கள் சொல்லப்பட்டு இவைகளை சந்தோஷத்தோடு வாங்குகிறோம். நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனால் இதே சமயம் இதில் ஆபத்து நிறைய இருக்கிறது என்று எல்லோருக்கும் தெரிந்து இருந்தும், அரசாங்கங்கள், சாலைத் துறையினரின் கட்டுப்பாடுகள், விதி முறைகளிருந்தும் இவைகளைப் பயன்படுத்தும் போது மட்டும், நாம் அவைகளை பின்பற்றுவதில்லை.

 அவசரம், அதிகவேகம், கவனமின்மை மேலும் அதிக தூரம் பயணம், ஹெல்மெட் அணியாமல் ஓட்டுவது இவைகளினால் எத்தனையோ விபத்துகள் கண்டும், கேட்டும், அறிந்திருந்தும் நாம் அவைகளை கடைபிடிப்பதிலும் கவனமே கொள்வதில்லை.

நாம் பைக்கில் பயணம் செய்யும் போது வேகமாக சென்றால் சீக்கிரம் போகும் இடம் சென்று விடலாம் என் நினைக்கிறோம். எத்தனை சீக்கிரம் செல்ல முடியும்?  ஒரு 10-15 நிமிடம்? இவ்வளவு தானே முடியும். இதையே 15 நிமிடம் முன்னால் புறப்பட்டாலும் சாதிக்க முடியுமே! ஆனால் வேகமாக சென்றால், ஏதேனும் சிறிய தடங்கல், விபத்து ஏற்பட்டால் இந்த 10-15 நேரமிச்சம் 1/2 மணியாகலாம், ஓரிரண்டு மணிகள் கூட தாமதமாகலாமல்லவா?

ஏன் கை கால் முறிவு, சிறிய பெரிய காயங்கள் ஏற்பட்டால் ஓரிரண்டு நாட்கள் மற்றும் பணச்செலவு நாம் இழக்க நேரிடலாம். இன்னும் பெரிய காயங்கள், இரத்த இழப்பு அதிகமானால் எத்தனை வேதனை, பெரிய பண நஷ்டம், மன உளைச்சல், நமக்கு மட்டுமில்லாமல் நம்மைச் சார்ந்தவர்களுக்கும் எத்தனை சிரமம், மன வேதனை, இன்னும் பல ....

ஆதலினால் அன்பர்களே நாம் எப்போதும் கார் மற்றும் பைக்கை செலுத்தும் போது நம் கவனம் வேறு பக்கம் போகாமல், டிரைவிங்கில் கவனம் முழுதும் செலுத்தி, வேகம் மிகவும் குறைத்து, சாலை விதிகள் மதித்து, ஹெல்மெட் மற்றும் சீட் பெல்ட் அணிந்து பாதுகாப்பாக செல்வோமாக!
விபத்துகளை தவிர்த்து வாழுவோமாக!  ....

அன்புடன்
Mohammed Rafi TMH

 Picture  :  From Google -
Thanks

Share |

No comments:

Post a Comment