Pages

Monday, December 27, 2010

முருங்கைக் கீரையின் மருத்துவ குணங்கள்


 நமது நாட்டின் தாவர செல்வங்களை நாம் சிறப்பாக உபயோகப்படுத்தா விட்டாலும் மற்ற நாடுகள் அறிந்து சிறப்பாக உபயோகப்படுத்துகின்றனர். இயற்கையை பாதுகாப்பதில் வெட்டிவேர் என்றால் நமது உடலை பாதுகாப்பதில் முருங்கையை கூறலாம். முருங்கையின் தாயாகம் இந்தியாதான் என்றாலும் இன்று ஆப்பிரிக்க நாடுகளில் இதன் பயன்பாடு மிக அதிகம். முருங்கை வளர்ப்பதை ஒரு இயக்கமாக கொண்டுள்ளனர்.
  
 குறிப்பாக தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும்  தேவையான சத்துக்களை குறைந்த செலவில் எளிய முறையில் கொடுக்க முருங்கை கீரையை பெருமளவில் பயிரிடுகின்றனர். 300 வித நோய்களை குணபடுத்துவதாகவும் நோய்களை உண்டாக்கும் அசுத்த நீரைச் சுத்தப்படுத்தவும் கண்டறிந்துள்ளனர்.

 முருங்கைக் கீரை மனித உடலுக்கு ஆரோக்கியத்தையும், தேவையான புரதச் சத்துகளையும் அளிப்பதில் காய்கறிகளும், பச்சைக் கீரைகளும் முக்கியப் பங்காற்றுகின்றன. கீரையைப் பச்சைப் பசேல் என்று அதன் நிறத்திலேயே சமைப்பதுதான் மிகவும் சிறந்தது.
100 கிராம் முருங்கை இலையை கீழ்கண்ட பொருட்களுடன் சம எடையில் ஒப்பீடு :

ஆரஞ்சை இருப்பதை விட 7 மடங்கு வைட்டமின் c அடங்கியது .
காரட்டில் இருப்பதை விட 4 மடங்கு வைட்டமின் A அடங்கியது
பாலில் இருப்பதை விட 4 மடங்கு சுண்ணாம்பு சத்து அடங்கியது
பாலில் இருப்பதை விட 2 மடங்கு புரோட்டின் சத்து அடங்கியது
வாழை பழத்தில் இருப்பதை விட 3 மடங்கு பொட்டாசியம் அடங்கியது
ஸபினாச் கீரையில் இருப்பதை விட 2 மடங்கு இரும்புச்சத்து அடங்கியது


இவ்வளவு பயனுள்ள முருங்கையை எளிமையாக கீரைக்காக மாடியில் வளர்க்கலாம். வறட்சியை தாங்கி வளர்க்கூடியது. செடி முருங்கை இதற்கு ஏற்றது. விதை மூலம் உற்பத்தி என்பதால் வளர்ச்சியை கட்டுக்குள் வைத்திருக்க முடியும். வேர் பகுதியில் நீர் செல்லுமாறு சிறு குழாயை வைத்தால் நீரின் தேவையை வெகுவாக குறைக்கலாம். மாடி என்பதால் சூரிய ஒளிக்கு பஞ்சம் இல்லை. கீரைக்காக வளர்ப்பதால் 5 அடிக்குள்ளாகவும் அடிக்கடி பறிக்கவும் வேண்டும். இல்லையேல் பூச்சி தாக்குதல் சமயங்களில் காப்பது சற்று கடினம், காற்று காலங்களில் ஒடியும் அல்லது நிலை சாயும்.15 அல்லது 20 நாட்களுக்கு ஒரு முறை கீரையை உபயோகிக்கலாம். சில மண்புழுக்களையும் இலைமக்கும் உபயோகித்தால் அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு நல்ல சத்தான கீரை கிடைக்கும்.
முருங்கை விதையைக் கூட்டு செய்து சாப்பிடலாம். இது மூளைக்கு நல்ல பலத்தை தரும். தாது விருத்தியை உண்டு பண்ணும். ஆனால் மலபந்தத்தைச் செய்வதில் முருங்கை விதைக்கு முதலிடம் தரலாம் 
  
 முருங்கைப் பூவை கஷாயம் செய்து வாரம் இருமுறை அருந்தி வந்தால் நரம்புத் தளர்ச்சி நீங்கும். முருங்கைப் பூவை நிழலில் உலர்த்தி பொடி செய்து வைத்துக்கொண்டு தினமும் கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் உள்ள பித்தம் குறைந்து, உடல் அசதி நீங்கி உடல் நிலை சீராகும்.

இதனை கூட்டாகவோ அல்லது பொறியல் செய்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்.
 
 மேலும் வாசிக்க கீழேயுள்ள வலைத் தளத்தில் இணைந்து காணவும்.
  
http://www.eegarai.net/t5043-topic
This tree is truly a “miracle” tree offering hope; nutritionally, medicinally and economically to devastatingly poor 3rd world countries. It has just recently begun being used as a supplement in a juice form and in powdered leaf tablets.

Sources:
Ramachandran,C., Peter,K.V. and Gopalakrishnan,P.K., 1980, Drumstick (Moringa oleifera): A multipurpose Indian Vegetable. Economic Botany, 34 (3) pp276-283.

http://peacecorps.mtu.edu/resources/...ts/moringa.htm
http://www.tfljournal.org/article.php/20051201124931586

Meitzner and Price (Amaranth to Zai Holes: Ideas for Growing Food Under Difficult Conditions, ECHO, 1996),
http://www.lboro.ac.uk/departments/c...i/sutherla.pdf

நன்றி படங்கள் :  Coogle

அன்புடன்
Mohammed Rafi TMH
Share |

No comments:

Post a Comment