Pages

Saturday, November 6, 2010

என் மனதை சலனப்படுத்தியதிலிருந்து சில ...

கவிதை, இசை,  ஈர்ப்பு ....

கவிக்கோ அப்துல் ரஹ்மான், வைரமுத்து...
இளையராஜா, சுஜாதா, இன்குலாப் ...



நிழல்கள்,பாலைவனச்சோலை, அதன் பிறகு அலைகள் ஓய்வதில்லை,  காதல் ஓவியம் ....  போன்ற படங்கள் ரிலீஸான காலம் முதலே "வைரமுத்து"வின் கவிதைகள் என்றாலே ஒரு மோகமுண்டு. தமிழின்பால் எனக்கு ஒரு ஈர்ப்பு வந்ததே வைரமுத்துவின் எழுத்துக்களால் தான்னு சொல்லலாம்.

அப்போது (1983)  நெல்லைக்கு ITI க்கு படிக்க வழக்கமாக (கல்லிடை to நெல்லை) ரயிலில் போவதுண்டு,  அப்போதெல்லாம் ITI க்கு கொண்டு போகும் நோட்டுகளுடன் மேலே எல்லோரும் காணும் படியாக பெருமையுடன் வைரமுத்து கவிதை, சுஜாதா, கவிக்கோ அப்துல் ரஹ்மான், வலம்புரி ஜான், இன்குலாப் இவர்களின் ஏதாவது ஒரு புத்தகத்தை வைத்துக் கொண்டும், ரயிலில் போகும்பொது படித்துக் கொண்டும், படித்தவைகளை அவற்றின் தாக்கங்களை மற்றவர்களுடன் ரசனையாக பகிர்ந்து கொண்டும் மகிழ்ந்த காலம். அவைகளை படித்துக் கொண்டிருக்கும் போது என்னையே மறந்து விட்டிருப்பேன்.

அவைகளில் சில PDF வடிவில் இங்கே இணைத்திருக்கிறேன் உங்களுக்காக.  Click & Save to Your desktop. நேரம் கிடைக்கும் தவறாது படித்து மகிழுங்கள். ...
Share |

1 comment: